Wednesday, 31 December 2025

வெற்றி மற்றும் சாதனைக்காக துணிந்து செயல்படு - தமிழ் நம்பிக்கை துளிகள்

 நல்லதே நினை நல்லதே நடக்கும்!

அனைவருக்கும் வணக்கம்! நாம் தமிழர் களஞ்சியத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 

உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் ஒவ்வொரு துறையில் அவர்களுடைய திறமையை செலுத்தி பல்வேறு வகையான சாதனைகளை செய்து வருகின்றனர். அதில் பொதுவாக நாம் பார்ப்பது நமது இந்திய நாட்டின் அனைத்து வகையான விளையாட்டு துறைகளிலும் பல்வேறு வகையான நபர்கள் அவர்களுடைய திறமையை தொடர்ந்து செலுத்திக் கொண்டு வருகின்றனர். 

அப்படி இருக்கும் போது சில சாதனையாளர்கள் மட்டுமே அவர்களுடைய திறமையை காட்டி உலக அளவில் பல்வேறு வகையான பரிசுகளை பெற்று விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அவர்களுடைய அதிகளவு முயற்சிகளால் மட்டுமே அவர்களால் அதனை சாதிக்க முடிந்தது. உதாரணமாக கிரிக்கெட் போட்டியில் இந்தியாவானது உலக கோப்பையை வெல்லும் பொழுது இந்தியர்கள் அனைவரும் குதூகலத்தில் இருந்தார்கள். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு அதிக அளவு மகிழ்ச்சியூட்டும் தருணமாக இருந்தது.

நீங்கள் சாதித்து விட்டீர்கள் என்ற சொல்லே ஒருவனை அதிகமாக உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு சொல்லாக இருக்கிறது. பெரும்பாலும் சாதித்து வருவார்கள் ஒருவருடைய சாதனையை முறியடித்து அவர்கள் அந்த சாதனையை சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்து அதிகபடியான முயற்சிகளை மேற்கொள்வார்கள். முன்பாகவே ஒருவர் செய்த சாதனையை முறியடித்து அந்த சாதனையை நீங்கள் வெல்லும் பொழுது அந்த சாதனையானது ஒரு புதிய சாதனையாக இருக்கிறது. 

உலகத்தில் பிறக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒரு தனி திறமையுடன் தான் பிறக்கிறார்கள். அந்தத் தனித்திறமையானது எது என்று அவர்கள் கண்டறிந்து அந்த திறமையில் அவர்கள் வெற்றி பெறும்போது அதுதான் சாதனையாக பிறக்கிறது. ஆனால் பெரும்பாலான நபர்கள் அவர்களுக்குள்ளே இருக்கும் திறமையை வெளிக்கொணராமல் உள்ளேயே வைத்துக் கொண்டு வேறொரு வேலையை தான் செய்து வருகிறார்கள். 

உலகத்தில் பிறந்த அனைத்து நபர்களுக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் போது ஆனால் அவர்கள் அந்த திறமையானது ஆற்றல்கள் மூலமாக வெளிப்படுகின்றன. அதிகபட்சமான நபர்கள் அவர்களுடைய மொத்த திறமையும் ஒரு ஒரு வேலையில் காட்ட விரும்புவதில்லை. அவர்கள் வாழ்வதற்கு தேவையான அளவு பணம் இருந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக வாழ்கின்றனர்...

எவர் ஒருவர் தன்னுடைய மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி அவர்களுக்கு விருப்பமான வேளையில் முழு திறமையை காட்டுகிறார்களோ அவர்களே சாதனையாளர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வேலையில் அவர்கள் மேலும் மேலும் தொடர்ந்து சாதித்துக் கொண்டே வருகின்றனர். 

அதிகபட்சமாக பணம் வைத்துக் கொண்டிருப்பவர் இது போதும் என்று நினைக்காமல் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். உதாரணத்துக்கு ஒரு கிராமத்தில் இருக்கும் செல்வந்தர் ஒருவர் நமது கிராமத்தில் நம்மை தாண்டி யாரும் முதலிடத்தில் இருக்க கூடாது என்று அவர்கள் மென்மேலும் பணம் சம்பாதிக்க மட்டுமே நினைப்பார்கள். இது கிராமத்தில் மட்டுமல்ல உலக அளவில் இருக்கும் அனைத்து வகையான செல்வந்தர்களும் இதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டிருக்கின்றன. 

நாம் இதை ஏன் பார்த்தோம் என்றால் சாதனையாளர்களும் அப்படித்தான் இருப்பார்கள். சாதனையாளர்கள் செய்யும் சாதனையை யாரும் முறியடிக்க கூடாது என்று மென்மேலும் அந்த சாதனையில் பல்வேறு வகையான மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். சாதனையாளர்கள் செய்யும் சாதனையானது நமக்கு அது சாதனையாக தெரிந்தாலும் அவர்கள் அதில் இன்னும் அதிக அளவு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். ஏற்கனவே செய்த சாதனையை வென்று அவர்கள் சாதனை படைத்திருந்தாலும் தன்னுடைய சாதனையை இன்னும் முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவார்கள். 

நமது எண்ணத்தில் சாதிக்க வேண்டும் நமது துறையில் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். சாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதுக்குள்ளையே இருக்க வேண்டும். நீங்கள் ஆசைப்பட்ட வேலையை செய்து அதில் உங்களது முழு திறமையையும் தொடர்ந்து செலுத்தி கொண்டே இருந்தால் கண்டிப்பாக நீங்கள் சாதனையாளராக வருவீர்கள். நீங்கள் சாதனையாளராக விளங்கினாலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் அவர்களால் மட்டுமே சாதனையும் படைக்க முடியும். நீங்கள் ஆசைப்படும் ஒவ்வொரு ஆசையும் உங்களை புதிய மனிதர்களாக மாற்றும். 

நிறைய நபர்கள் தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணராமல் அவர்கள் உள்ளே வைத்துக் கொண்டு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இருக்கும் சூழ்நிலை மற்றும் சுற்றி இருக்கும் நபர்களால் அவர்கள் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் பிறந்த அனைவரும் அவர்களுடைய வாழ்வை தீர்மானிக்க முடியாதவர்கள் எப்படி சாதனை படைக்க முடியும்?

இன்னும் சில நபர்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாய்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் அவர்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள். அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் பார்ப்போம்! 

ஒரு மனிதன் அவனுக்குள் இருக்கும் ஆற்றல் மற்றும் திறமையை வெளிப்படுத்துவதே அதிர்ஷ்டமாகும். அவனுடைய திறமையினால் கிடைக்கும் பலனை அதிர்ஷ்டமாகும். இந்த விஷயம் நிறைய பேருக்கு புரியவில்லை. தனக்குள் இருக்கும்

 ஆற்றலை சரியாக பயன்படுத்தி அதில் முழு கவனமும் செலுத்தினால் கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கையில் மென்மேலும் சாதித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த சாதனையே அவர்களை அதிர்ஷ்ட காரர்களாக மாற்றுகிறது. பெரும்பாலான மக்கள் சாதித்தவர்களை அவர்கள் ஏதோ அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் சாதனையாளர்கள் அவர்களுடைய ஆற்றலை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே அவர்களால் வெற்றிக்கான முடிந்தது.

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க விரும்பும் நபர்கள் மேற்கூறிய அனைத்தையும் சரியாக உங்கள் மனதிற்குள் பதித்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களால் சாதனையை நோக்கி ஓரளவிற்கு செல்ல முடியும். 

சாதனை செய்து அனைத்து நபர்களையும் நீங்கள் கவனமாக பார்த்தால் அதில் உங்களுக்கு ஒரு உண்மை புரியும். யாரும் செய்ய முடியாத அல்லது செய்ய இயலாத காரியங்களை முயற்சி செய்து அதில் வெற்றி பெற்று சாதனையாளர்களாக விளங்குவார்கள். அதற்குப் பிறகு அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்று பல நபர்கள் முயற்சி செய்வார்கள். 

புதிய புதிய சிந்தனைகள் ஏற்படக்கூடிய நபர்களால் மட்டுமே வெற்றி காண முடியும். உங்களுக்குள் தோன்றும் புதிய சிந்தனைகளை நீங்கள் அப்படியே சிந்தனைகள் மற்றும் வைத்துக் கொள்ளாமல் அதனை செயலாக மாற்ற வேண்டும். இப்படி நினைப்பவர்கள் மட்டுமே ஏதாவது ஒன்று சாதிக்கிறார்கள். 

நாம் சாதிக்க வேண்டும் உலக அளவில் நம்முடைய பெயரும் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய புதிய சிந்தனையை நோக்கி பயணத்தை தொடர வேண்டும். ஒரு விஷயமானது நம்மளால் முடியும் என்று தைரியமாக அந்த விஷயத்தில் இறங்க வேண்டும். அந்த விஷயத்தை நீங்கள் உடனடியாக செய்யாமல் சிறிது நாட்கள் கழித்து செய்து கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள்தனமாகும். இவ்வகையான செயல் ஆனது உங்களுடைய வெற்றியை நீங்களே தள்ளி போடுவதாகும். 

எல்லோருக்கும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இருந்தாலும் ஒரு சில நபர்கள் மட்டுமே மூட்டி மோதி வாழ்க்கையில் வெற்றி காண்கிறார்கள். மற்றவர்கள் அந்த எண்ணத்தை அப்படியே மனதிற்குள்ளே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நபர்கள் தக்க காலம் வரட்டும் அதிர்ஷ்ட நேரம வரட்டும் நல்ல நேரம் வரட்டும் என்ற எண்ணம் அவர்களை காத்திருக்க வைக்கிறது. அப்படி காத்திருக்கும் நபர்கள் அப்படியே காலப்போக்கில் அதனை மறந்து விடுகிறார்கள். 

நீ சாதனையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் சாதனையானது உன்னை நோக்கி பல அடிகள் எடுத்து வைக்கும். 

அதிகபட்சமான நபர்கள் இருந்த இடத்திலேயே வெற்றி காண வேண்டும் சாதனை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதுவே அவர்களுடைய அதிகபட்சமான முட்டாள்தனமாகும். அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு என்னையும் உலகம் போற்ற வேண்டும் என்று நினைத்தால் அது எப்படி நியாயமாகும். ஒரு சில சிறிய முயற்சிகள் கூட எடுக்காமல் இப்படி நினைப்பது முட்டாள்தனமாகும். 

இன்னும் சில நபர்களுக்கு வெற்றி எப்படி வருகிறது என்றால் அதிகம் நம்மிடம் செல்வம் இருக்க வேண்டும் பணம் இருக்க வேண்டும் அதிகபட்சமான காசுகள் மற்றும் நகைகள் இருக்க வேண்டும் மற்றும் கார் பங்களா போன்றவை இருந்தால் இதுதான் நமக்கு வெற்றி என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். 

மற்றும் சில நபர்கள் லட்சியம் ஒன்று வைத்துக் கண்டு அதில் சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதில் வெற்றி பெற்றவுடன் அதுதான் சாதனை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொன்று வெற்றியாக இருக்கிறது. எனவே அவர்களுக்கு தெரிந்த வெற்றியை அவர்கள் வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு சில நபர்கள் ஒரு லட்சத்தை வைத்துக்கொண்டு அதனை குறிக்கோளாக எடுத்து அதில் போராடி வெற்றி பெறுவார்கள். எவர் ஒருவர் தனக்குள் இருக்கும் திறமையை அறிந்து கொண்டு அதனை ஆற்றலாக வெளிப்படுத்தி அதில் தொடர்ந்து முயற்சி செய்கிறார்களோ அவர்களே சாதனையாளர்களாக ஆக முடியும். இப்படி வெற்றியை பெற்றவுடன் அவர் இத்துடன் சாதனை முடிந்து விட்டது என்று ஓய்வெடுப்பதில்லை. இதைவிட நம்மால் இதற்கு மேல் என்ன சாதிக்க வேண்டும் என்று புதிதாக எண்ணம் தோன்றும் நபர்கள் அதனை ஆற்றலாக வெளிப்படுத்தும் போது அவர் மகத்தான வெற்றியை பெறுகிறார். இதுதான் உண்மையான சாதனை. 

நம்மால் முடிந்ததை மட்டும் செய்வோம் என்று நினைப்பவர்கள் வெற்றியினை பெற முடியாது. நமக்கு பிடித்த வேலையில் எவ்வளவு சிறப்பாக இருக்கிறோமோ அதுதான் உண்மையான வெற்றி. பெரும்பாலும் நம்பர்கள் ஒரு சிறிய வெற்றியை பெற்றுவிட்டு இதைவிட நம்மளால் சிறப்பாக செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டும் அந்த வெற்றியை போதும் என்று நினைத்து அவர்கள் திருப்தி படுத்திக் கொள்வது உண்மையான வெற்றி என்று சொல்ல முடியாது. அந்த வெற்றியை பெற்றவுடன் இன்னும் மேலாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று முயற்சி செய்பவர்களே சாதனையாளர்களாக தோன்றுகிறார்கள்.

Comments


EmoticonEmoticon